செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசு நில அபகரிப்பு வழக்கு யார் மீது போட்டார்கள் இன்றைக்கு ? 2001 – 2006 இல் சட்டத்துறை அமைச்சர் அன்றைக்கு இந்த சட்டம் கொண்டு வந்தது இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். திமுக முழுக்க முழுக்க நில அபகரிப்பு செய்கின்ற தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள், யாரும் நிலம் வாங்க முடியாது.
யாராவது நிலம் வாங்கினால், அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அதிபதியை பார்த்துக்கொண்டு, திமுக மாவட்ட செயலாளரை பார்த்து விட்டு அவர்கள் சொல்கின்ற விலைக்கு, கட்டுபடி ஆகவில்லை என்றால்… அந்த நிலத்தை பிடுங்கி கொள்வார்கள். இப்படி ஏகப்பட்ட அளவிற்கு நில அபகரிப்பு முழுக்க முழுக்க திமுக செய்ததனாலேயே என்ன செய்தார்கள் ? அந்த சட்டத்தை கொண்டு வந்து எல்லா திமுகவினரையும் கைது செய்தார்கள்.
அதுதான் இன்றைக்கு சொல்கிறார்கள், நாங்கள் எல்லாம் நில ஆக்கிரமிப்பினுடைய ஆபத்பாண்டவர்கள், நாங்கள் தான் பாதுகாப்போம் அப்படி என்றால் என்ன ? முழுக்க முழுக்க திமுக தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களே சொல்லிவிட்டார், ஒத்துக்கொண்டார்.முதலமைச்சராக இருக்கின்ற திரு ஸ்டாலினுடைய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர், அவருடைய சட்டமன்ற அலுவலகமே போன மழையில் பல நாட்களாக மூழ்கிருந்தது.
அப்போது தன்னுடைய தொகுதியே பராமரிக்க முடியாத, தன்னுடைய தொகுதியை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியாத, முதலமைச்சர் இந்த நாடு பெற்றிருப்பது தான் வேதனைக்குரிய ஒரு விஷயமாக நாம் பார்க்க முடியும். இந்த மழையிலாவது உருப்படியாக எந்த வேலையாவது செய்தால் அது நல்லது. அது செய்வார்களா ஆனால் ? நிச்சயமாக செய்ய மாட்டார்கள் என தெரிவித்தார்.