465 வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்பவர் வாழ்ந்துள்ளார் இவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்பே கணித்து இருந்தார். அவர் கருத்துப்படி சில சம்பவங்கள் நடந்து வரலாறு படைத்தது. 3797 வருடம் வரை என்ன நடக்கும் என்பதை இவர் கணித்துள்ளார். நாம் இப்போது 2021 ஆம் வருடம் என்ன நடக்கும் என அவர் கணித்து இருப்பது குறித்து பார்க்கலாம்.
சோம்பிகள்
பாதி உயிருடனும் பாதி இறந்த நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் இந்த வருடம் பரவும் என்றும் இதனால் ஏராளமானோர் மரணம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உணவு பஞ்சம்
இந்த வருடம் மிகப்பெரிய உணவு பஞ்சம் இருக்கும் என அவர் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஐநா சபையும் இதையேதான் தெரிவித்துள்ளது.
விண்கல் தாக்குதல்
நாஸ்ட்ரடாமஸ் மிகப்பெரிய விண்கல் உலகத்தை தாக்கும் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை சீற்றம்
மேற்கு உலகத்தில் யாரும் எதிர்பாராத அளவு நிலசரிவு போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும் என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் போர்
உலகத்தின் தலைவர்களில் மிகப்பெரியவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் நடக்கும் என நாஸ்ட்ரடாமஸ் தெரிவித்துள்ளார்.
நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஹிட்லரின் பிறப்பு, முன்னாள் அமெரிக்க அதிபரான கென்னடியின் கொலை போன்றவை நடந்திருந்தாலும், ஒரு சிலது நடக்கும் அறிகுறிகள் தென்பட்டாலும் இது ஒரு புரளி போன்றுதான் சமூக வலைத்தளங்களில் பரவி வாருவது குறிப்பிடத்தக்கது.