தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் 2022-ம் ஆண்டு முடிய போகும் நிலையில் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக பிளாப் படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலை தன்னுடைய வலைதள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் அசோக் செல்வன் தான் அதிக ப்ளாப் படங்களை கொடுத்தவர் என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குரைக்கும் நாயை கண்டுகொள்ளாமல் முன்னேறி செல்வோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் அசோக் செல்வன் ப்ளூ சட்டை மாறனை தான் நாய் என்று டுவிட்டரில் விமர்சித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
Ignore the barking dogs and keep moving forward 🔥 #SelfMade pic.twitter.com/bN9ywnw4P4
— Ashok Selvan (@AshokSelvan) December 17, 2022