உலக அளவில் பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டில் இந்தியர்களால் அதிக அளவில் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியர்களால் அதிக அளவில் ஒரு பிக் பாஸ் பிரபலத்தின் பெயர் தான் தேடப்பட்டுள்ளது. அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனில் பாடகரான அப்து ரோசிக் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவரைத்தான் இந்தியர்கள் அதிக அளவில் கூகுளில் தேடி உள்ளார்கள். இவர் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார்.
அதன் பிறகு பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் அப்து ரோசிக் ஒரு பாடகராக இருப்பினும் ஒரு youtube சேனலையும் நடத்தி வருகிறார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சல்மான் கானின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 6.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதனையடுத்து அப்து ரோசிக்குக்கு தற்போது 19 வயது ஆகும் நிலையில் பார்ப்பதற்கு குழந்தை போன்று தான் இருப்பார்.
ஏனெனில் இவர் சிறுவயதில் rickets நோயினால் பாதிக்கப்பட்டதால் அவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு ஆரம்பகாலத்தில் சிகிச்சை கொடுத்திருந்தால் குணப்படுத்தி இருக்க முடியும். ஆனால் அப்துல் ரோசிக்கின் குடும்ப சூழ்நிலை காரணமாக சிகிச்சை கொடுக்க முடியாமல் போய்விட்டது. மேலும் தற்போது அப்து ரோசிக்குக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி விட்டதால் படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.