திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மூன்று மொழி போர்களை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். முக்கியமாக மூன்றாவது மொழிப்போர், அதை முன் நின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாணவர் அணி தான்.
இப்பொழுது அந்த மாணவர் அணிகளோடு, இளைஞர் அணியும் சேர்ந்து இந்த ஹிந்தி திணிப்பு மொழிப்போரில் களம் இறங்கி இருக்கிறோம். இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடந்த நான்கு வருடங்களாக எந்த போராட்டத்தை எடுத்தாலும் அதிலே வெற்றி பெற்றிருக்கிறோம். அதிலே இந்த ஹிந்தி திணிப்பு போராட்டதிலும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
மேற்கு வங்காளத்தில் கலைஞருடைய புகைப்படத்தையும், நம்முடைய பேரறிஞர் அண்ணாவின் உடைய புகைப்படத்தையும், தலைவருடைய புகைப்படத்தை எடுத்து தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் என்றும் உங்களுடைய ஹிந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள். எப்படி 2019 தேர்தலில் பாசிச பாஜகவை ஓட ஓட விரட்டி அடித்தோமோ அதே போல எங்கள் அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் சொன்னார்கள்.. எங்களுடைய 2024 நாடாளுமன்ற பிரச்சாரத்திற்கு இது ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும்.