3 மாததிற்குள் இலவச மடிக்கணனி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .
தமிழகத்தின் கடந்த மாநிலங்களவை தேர்தலின் வாக்குறுதியாக பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆனது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு தற்பொழுது வரை இலவச மடிக்கணினியை வழங்காமல் அதிமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மடிக்கணினி வழங்க வேண்டி போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டம் தமிழகம் முழுவதும் தற்பொழுது தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அதில், இலவச மடிக்கணினியை வழங்க தேவையான அணைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 2017-18 ஆம் கல்வி ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு பயின்று வெளியேறிய அனைத்து மாணவர்களுக்கும் இன்னும் மூன்று மாதத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.