தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடதமிழகம் அதை ஒட்டிய கர்நாடகா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பள்ளிகளில் 4 சென்டி மீட்டரும் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.