Categories
மாநில செய்திகள்

இன்னும் 7 மாசத்துல… நாங்க ஆட்சியை பிடிப்போம்… முக ஸ்டாலின் உறுதி…!!

இன்னும் ஏழு மாத காலகட்டத்திற்குள் திமுக ஆட்சியை பிடிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக மற்றும் திமுக இடையே நிலவி வரும் பிரச்சனை இன்று நேற்று என்பது இல்லை ஆண்டு தொட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய, முதல்வர் முக ஸ்டாலினிடம் நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி வாதாடினாரா? இல்லையா? என்று கோபமாக கேட்டார். அதன் பிறகு கூட்டத்தில் இல்லாத நளினி பற்றிக் கூறுவது தவறானது என திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இவ்வாறு இரு கட்சிக்கும் மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது ஒரு தொடக்க விழாவில் மு க ஸ்டாலின் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது, சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகண்டு பேசிய அவர், இன்னும் 7 மாதத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என கூறினார். அதற்கு முன்னதாக, பெரியார் விருது மீனாட்சிசுந்தரத்திற்கு, அண்ணா விருது ராமசாமிக்கு, கலைஞர் விருது உபயதுல்லாவிற்கு, பாவேந்தர் விருது தமிழரசிக்கு, மற்றும் பேராசிரியர் விருது ராஜகோபாலுக்கு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியாக “எல்லோரும் நம்முடன்” என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், நீட் தேர்வையோ, இந்தி திணிப்பையோ தமிழக அரசால் தடுக்க முடியவில்லை என்று  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |