ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதை பந்துகளை உருவாக்கும் சாதனை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் 72 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் விதைகளை கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் சாதனை முயற்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். விதைப்பந்துகள் உலர வைக்கப்பட்டு பின்னர் மாவட்டம் முழுவதும் தூவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.