வட மாநிலத்தில் ஒருவர் குக்கரை வைத்து வித்தியாசமான முறையில் ஆவி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆயுஸ் அமைச்சகமும் சில மருந்துகளைப் பரிந்துரைத்து வருகின்றது. நாம் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆவி பிடிப்பது நல்லது என்று கூறப்பட்டது.
பொதுவாக நாம் சளி, இருமல். தலைவலி போன்ற பிரச்சினைகள் இருக்கும் பொழுதும் ஆவி பிடிப்போம். அதுபோன்று ஆவி பிடிப்பது நல்லது என்று கூறப்பட்டதால் மக்கள் அனைவரும் அதை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு நபர் குக்கரில் டியூபை சொருகி அதன் மூலம் புனல் ஒன்றை வைத்துக் கொண்டு அதிலிருந்து ஆவி பிடிக்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
https://www.youtube.com/watch?v=F3kmGbpSuss&t=17s