Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறிய வாக்குவாதத்தில்… சாதியை கூறி திட்டிய கட்டிட மேஸ்திரி… கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தரக்குறைவாக பேசிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியில் பிரகாஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சேர்ந்தமங்கலம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் விக்னேஷ்(27) என்பவருக்கும் இடையில் இரு சக்கர வாகனம் லேசாக மோதியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுக்கு இடையில் நடந்த வாக்குவாதத்தில் விக்னேஷின் சாதி பெயர் கூறி பிரகாஷ் தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து விக்னேஷ் சேர்ந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பிரகாசை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |