டெல்லியில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சில வாரங்களாக கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியுள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா தொற்று 36 சதவீதமாக இருந்தது. தற்போது தோற்று 2.5% குறைந்து காணப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை ஊரடங்கு முடிவுக்கு வருகின்றது. இதனால் இன்று மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார்.