பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி கிடக்கும் சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது என எதையாவது செய்து தங்களது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் அவர் நின்று கொண்டிருந்தது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சிகரெட் இருப்பதை கூர்ந்து கவனித்த நெட்டிசன்கள், தனியாக இருக்கும் உங்கள் வீட்டில் சிகரெட் பாக்கெட் எப்படி வந்தது? எதுக்கு சிகரெட் பாக்கெட்? என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது .
https://www.instagram.com/p/B-7Gk8ZgwPQ/?utm_source=ig_web_button_share_sheet