Categories
Uncategorized மாநில செய்திகள்

தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது!

கொரோனா பரிசோதனை செய்ய தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இத

னால் நாள்தோறும் 13,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 11,835 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இதுவரை 4,21,450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க 10 லட்சம் பிசிஆர் கருவிகளை தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது. அதில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கருவிகள் கடந்த வாரம் வந்தடைந்தது. தொடர்ச்சியாக இன்று 1.50 லட்சம் கருவிகள் வந்துள்ளது. இதனால் தற்போது வரை சுமார் 2.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்துள்ளது. 7,50,000 கருவிகள் விரைவில் வரும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |