Categories
மாநில செய்திகள்

கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும்… தமிழக அரசு கோரிக்கை…!!

கூடுதலாக 6 ரயில்களை இயக்க தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளைக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஈடு செய்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது மக்கள் தங்களது பணிக்கு திரும்ப செல்ல ஏதுவாக அமைகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரயில்களை மக்கள் பேருந்துகளை விட  அதிகமாக பயன்படுத்துவதால் கூடுதல் ரயில் சேவைகளை அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது சென்னை – கன்னியாகுமரி, சென்னை- தூத்துக்குடி,  சென்னை-மேட்டுப்பாளையம், எழும்பூர் – செங்கோட்டை,  சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கும் என கூடுதலாக 6 ரயில்கள் இயக்க தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |