செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, மின்சாரத்துறைக்கு ஒரு மாதத்திற்கு 7 கோடி அளவிற்கு தான் வருமானம் வந்துச்சு, மின்வாரியத்திற்கு…. ஒட்டுமொத்தமா ஒரு வருஷம் கணக்கு எடுத்தீங்கன்னா… 70 லிருந்து 77 கோடி தான் ஒரு ஆண்டுக்கு சராசரியா கடந்த ஆட்சியில் வருமானம் வந்துச்சு. இப்ப 80 கோடி உயர்த்தப்பட்டிருக்கிறது. 7 கோடி ரூபாய் வந்த இடத்தில் இப்போ 13 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமானம் அதிகரிச்சிருக்கு.
இப்போ வட்டியை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா… ஆர்.இ.சில வாங்குன லோன் 6600 கோடி அளவிற்கு 13 சதவீதம் இருந்த வட்டி 10% ஆக குறைக்கப்பட்டு, ஓராண்டுக்கு 84 கோடி ரூபாய் வட்டி மட்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, முதலமைச்சர் தொடர்ந்து இதை கண்காணித்து, எந்தெந்த வகையில் நாம் செலவுகளை குறைக்க முடியும். எந்தெந்த வழியில் நாம் வருவாயை பெருக்க முடியும்.
ஏற்கனவே என்னென்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் ? என்பதெல்லாம் உத்தரவு கொடுத்து, அதன்படி மின்வாரியம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் வரக்கூடிய ஆண்டுகள்… குறிப்பா ஒரு மூன்று ஆண்டுகளுக்குள்…. நமக்கு வரக்கூடிய வருவாயும், ஏற்படக்கூடிய செலவினமும் சரி செய்யப்படும். உறுதியாக மூன்று ஆண்டுகளுக்குள்ள கொண்டுவரப்படும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்திருக்கிறோம் என தெரிவித்தார்.