தேர்தலை முன்னிட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதை தடுக்க எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் காலம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதைத் தடுக்க தமிழக மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும்ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தப்படும் ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் 8 வழிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளது.