குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க முயன்றபோது பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .
தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் பகுதியில் குரங்குகள் நிறைய உள்ளன. வெயிலின் கொடுமை காரணமாக அங்கு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து அடிக்கடி குடிக்கும். அப்படி இன்று ஒரு குரங்கு அலுமினிய பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாட்டி கொண்டது. அதை எடுப்பதற்கு அந்த குரங்கு பல முயற்சிகளை செய்தும் பலனில்லை.
இதையடுத்து அருகில் இருந்த மற்றொரு குரங்கு அந்த பாத்திரத்தை எடுக்க முயன்றது. அதுவும் பயனளிக்கவில்லை. இதனால் குரங்கு உணவு உண்ண முடியாமல் தண்ணீர் அருந்த முடியாமல் சிக்கித் தவித்தது. அது பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அருகிலுள்ள வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து குரங்கை பிடித்த வனத்துறையினர் அந்த பாத்திரத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.