அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் அவர்கள் அங்கு தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பல ஹிந்து பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். ஆகவே அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மதமாக கொண்டாட டெக்சாஸ், ஃபு ளோரி டா, ஜெர்ஷி, மசாசூசெட்ஸ் போன்ற மாகாணங்கள் தீர்மானத்தை எடுத்துள்ளனர். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது சேவை, நம்பிக்கை தன்மை, கொள்கை பகிர்வு போன்றவற்றின் சுடராக இந்துக்கள் திகழ்கின்றனர்.
மேலும் உலகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹிந்து மதக் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர். ஹிந்து மத கொள்கையானது தனிப்பட்ட கலாச்சாரம், வரலாறு அமெரிக்க நாட்டிற்கும் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அக்டோபர் மாதம் முதல் கலாச்சார நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், ஆடை அலங்காரம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அமெரிக்காவில் உள்ள ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முறைகளை பின்பற்றி நேரடியாகவும் காணொளி வாயிலாகவும் கொண்டாட்டங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால் அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக அமெரிக்க ஹிந்து கவுன்சிலிங் தலைவர் சஞ்சய் கவுல் கூறியதில் “ஹிந்து மதத்தின் பாரம்பரியமும் கலாச்சாரமும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமையானது. அத்தகைய பாரம்பரியத்தை நாம் உலக நாடுகளுடனும் வருங்கால தலைமுறையினரிடமும் பகிர்ந்து கொள்வது நம் தலையாய கடமை” என்று கூறியுள்ளார்.