அமெரிக்க வாழ் தமிழர்கள் அங்குள்ள தேவாலயத்தில் நடந்த விழா ஒன்றில் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹண்டன் என்ற பகுதியில் தமிழ் குடும்பங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் புளோரிஸ் யுனைட்டட் மெதடிஸ்ட் என்ற புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சேலை அணிந்து வந்து வழிபட்டனர்.
மேலும் சிறுமிகள் தாவணி அணிந்தபடி வந்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் தமிழ் பாடல்களை பாடி அசத்தினார்கள். இதனைக் கண்ட தேவாலயத்தில் இருந்த அமெரிக்கர்கள் தங்களது பாராட்டுக்களை தமிழர்களுக்கு தெரிவித்தனர்.