தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இசக்கி சுப்பையா கருத்து தெரிவித்துள்ளார் அதில் அமமுகவின் உட்கட்சி ஜனநாயகம் குறித்தும், கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான தகவல்கள் குறித்தும் எனது தனிப்பட்ட கருத்தை நாளை அனைவரின் முன்பும் பகிரங்கமாக கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.மேலும் அமமுக கட்சியின் தலைமை அலுவலகம் தற்பொழுது அமைந்திருக்கும் இடமானது இசக்கி சுப்பையா அவர்களின் சொந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.