Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆந்திராவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அமல்…!!

 ஆந்திர மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பதால் பலத்த கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நோய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில மாதங்களாக இதனின்  தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நோய் வருவதற்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி போடப் பட்டு வருகின்றது.

ஆந்திர மாநிலம் முழுவதும் கொரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள போதும் கொரோனா நோயின் தாக்கம் குறையாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் மே 5-ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு பலத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும். மதியம் 12 மணிக்கு பின்பு 144 தடை உத்தரவின் படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதால் அவசரகால சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவுவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்  இதனை அறிவித்துள்ளார்.

Categories

Tech |