ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகில் பல்வேறு மலைப்பிதேசங்களில் வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்து வருகின்றனர். பனி சறுக்குகள் போட்டிகளாகவும் நடத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இயற்க்கையின் பிடியில் சிக்கி வீரர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து விடுகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு சில பனிச்சறுக்கு வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்வதற்கு சென்றனர்.
பின்னர் அங்கு சென்று பனிசறுக்கு செய்வதற்காக விரும்பி தயார் நிலையில் இருந்தனர். அப்போது பனி மிக கடினமாக இல்லாமல் லேசானதாக இருந்ததால் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.அப்போது தயார் நிலையில் இருந்த 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பனியில் சிக்கியவர்களை அவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.