Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கொடூர கொலை… பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக கிடந்த சடலம்… கொலையாளி யார்?

பாரபங்கி மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரேதச மாநிலம், பாரபங்கி மாவட்டத்திலுள்ள சேப்ஃதாபாத் என்ற பகுதியில் கேட்பாரற்ற நிலையில் பெட்டியும், பிளாஸ்டிக் பையும் கிடந்தது.. 2 நாள்கள் ஆன நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அருகில் இருக்கும்  போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பெட்டி மற்றும் பிளாஸ்டிக் பையை திறந்து சோதனை போட்டனர். அப்போது அதற்குள் பெண் ஒருவரின்  தலை, கை மற்றும் கால்களை கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இறந்த அந்த பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பின்னர் அந்தபெண் யார்? அவரை இப்படி கொடூரமாக முறையில் கொலை செய்த கொலையாளி யார்? என பல கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |