மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹால் சென்றுள்ள நடிகர் சாந்தனு, க்யூட் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இளம் வயதிலேயே தந்தையின் இயக்கத்தில் ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்த இவர், தற்போது ஹீரோவாக பல படங்களில் தோன்றிவருகிறார்.
பிரபல டிவி தொகுப்பாளரான கீர்த்தியை திருமணம் செய்துகொண்டுள்ள இவர், அவருடன் இணைந்து காதல் சின்னமான தாஜ்மஹாலுக்குச் சென்றுள்ளார். அங்கு தாஜ்மஹால் முன்னிலையில் அழகான க்யூட் விடியோ ஒன்றை எடுத்து, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
‘ஜீன்ஸ்’ படத்தில் இடம்பெறும் ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ பாடலை சாந்தனு பாடி கீர்த்தியை அழைக்க, அருகில் வரும் அவர், ‘நானா… ஐயோ தாங்கல’ என சாந்தனுவை நோஸ்கட் செய்துசெல்கிறார். இந்தப் பதிவில், தளபதி64 படத்தின் ஷுட்டிங்குக்கு இடையே தாஜ்மஹாலுக்கு ரொமாண்டிக் டிரிப் வந்துள்ளேன். வழக்கம்போல் கீர்த்தியை இம்ப்ரஸ் செய்ய முயற்சித்தபோது, பல்பு வாங்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, அவரது படங்களைத் தவறாமல் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதையடுத்து தற்போது விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து தளபதி64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
In between shoots of #Thalapathy64
What I thought will be a romantic trip to Agra #TajMahalAs usual I try to impress @KikiVijay … and she gives me a “Bulbbuu” … PERIOD 🥺🙄🤣 pic.twitter.com/qjsMd27tue
— Shanthnu (@imKBRshanthnu) November 10, 2019