Categories
உலக செய்திகள்

திருப்தியில்லை… மெத்தனப்போக்கு… பிரேசிலில் சமையல் பாத்திரங்களால் ஒலி எழுப்பி மக்கள் போராட்டம்!

பிரேசிலில் அதிபரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சமையல் பாத்திரங்களை வைத்து ஓசை எழுப்பி மக்கள் போராட்டம் நடத்தினர்.

கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Image result for Brazil demonstrators bang on pots and pans

பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரசால் 250 க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மரணமடைந்தார். இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ (jair bolsonaro) தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

Image result for Brazil demonstrators bang on pots and pans

ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும்,  சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டின் பால்கனி விளக்குகளை விட்டுவிட்டு அணைத்தும், சமையல் பாத்திரங்களை வைத்து சத்தமாக ஓசை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.

Categories

Tech |