Categories
உலக செய்திகள்

ஆசைக்கு ஒரு அளவு இல்லையா… நெருக்கமான போட்டோ… கடித்து விழுங்கிய முதலை..!!

பிரேசிலில் முதலையை மிகவும் நெருக்கமாக போட்டோ பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறி விழுங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் ‘புளோரியா நோபிள்ஸ்’ என்ற இடத்தில் உள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதில் ஏதாவது ஒரு முதலையை நெருக்கமாக படம் பிடிக்க வேண்டும் என விரும்பிய ஒரு நபர் விசித்திரமாக யோசித்து தனது டேப்லட் வகை செல்போனை கயிறு கட்டி தண்ணீரில் இருந்த முதலையை நோக்கி கீழே இறக்கினார்.

இதனை பார்த்த ஒரு முதலை உணவு என நினைத்து அதனைக் கடிக்க முயன்றது. அப்படியும்  அவர் ஆபத்தை உணராமல் மீண்டும் மீண்டும் போட்டோ எடுக்க முயன்றார். அப்படி மறுபடியும் இறக்கி முதலையைப் போட்டோ பிடிக்க முயன்றபோது, ஒரு முதலை எகிறிக் குதித்து, அதனைக் கவ்வி இழுத்தது. இறுதியில் டேப்லட் முதலையின் வாய்க்குள் சென்றுவிட்டது. அந்த நபர் பெருத்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். ஏன் இந்த ஆசை கடைசியில் அம்போவாகி விட்டது.

Categories

Tech |