Categories
உலக செய்திகள்

கண்டிப்பா இந்த குழந்தை தான்… ஆனால் 17 வயது கர்ப்பிணிக்கு நிகழ்ந்தது என்ன?… ஆச்சரியத்தில் குடும்பம்…!!

பிரிட்டனில் 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் worcestershire ஐ சேர்ந்தவர் kacey  strickland.. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உள்ளதாக மருத்துவர்கள் உறுதியுடன் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ella என பெயர் வைப்பதற்கும் முடிவு செய்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, பிரசவத்தில் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறிய நிலையில், ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அந்த பெண்.. இது அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஒருசேர ஆழ்த்தியது.

Baby 'Ella' turns out to be a little fella - Metro Newspaper UK

இதுகுறித்து அந்த பெண்ணின் 50 வயதான தாயார் julie strickeland கூறுகையில், பேத்தி பிறக்கப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேரன் பிறந்திருக்கிறான்.. சிசேரியன் மூலமாக குழந்தை அவளுக்கு பிறந்துள்ளது என கூறினார்.

My baby girl was actually a boy!' - Worcester mum's lockdown birth ...

குழந்தை பெற்றெடுத்த பெண் கூறுகையில், “பெண் குழந்தை தான் பிறக்க போகிறது என்று பெயர் தேர்வு செய்துவிட்டு அவளுக்கான உடைகளையும் தயார் செய்து வைத்திருந்தோம்.. ஆனால் எதிர்பாராதவிதமாக ஆண் குழந்தை பிறந்து விட்டது.. இது முதலில் எனக்கு அதிர்ச்சியளித்தாலும்,  பின்னர் மகிழ்ச்சியை தந்துள்ளது.. ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் எப்படி பொய்த்துப் போனது என்று எனக்கு தெரியவில்லை.. ஆனாலும் இது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது” என்றார்.

Categories

Tech |