பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்துச் சிதறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்து சிதறியுள்ளது. அதாவது பிரித்தானியாவில் உள்ள லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த காரில் பயணித்த நபர் ஒருவர் (ஆண்) இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மெர்சிஸைட் காவல்துறையினர் அந்த விபத்தில் மற்றொருவரான டாக்ஸி ஓட்டுனர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பில் 21, 26, 29 வயதுடைய ஆண்கள் 3 பேரை காவல்துறை அதிகாரிகள் கென்சிங்டன் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.