Categories
உலக செய்திகள்

இனி பள்ளிகளில் இதற்கு தடை..! கல்விச் செயலாளர் ஆலோசனை… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானியாவில் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளில் செல்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளில் அமைதியை உருவாக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் செல்போன்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியை சேதப்படுத்தும் விதமாகவும், கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் செல்போன் போன்ற சாதனங்கள் இருப்பதால் பள்ளி வளாகங்களை மொபைல் இல்லாமல் மாற்ற விரும்புவதாக வில்லியம்சன் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் செல்போன்கள் அதிகமாக பயன்படுத்தினாலோ அல்லது தவறாக பயன்படுத்தினாலோ அது மாணவர்களுடைய நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளார். எனவே வில்லியம்சன் கொண்டுவரவுள்ள திட்டமானது ஆலோசனையாகவே இருந்து வரும் நிலையில் இந்த திட்டங்களை வகுப்பறைகளில் அமல்படுத்துவது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிற ஊழியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |