Categories
உலக செய்திகள்

மகளுக்காக கருவை சுமந்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்

பிரிட்டனில் தன்னுடைய சொந்த மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்ற தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் மற்றும் ஜெசிகா தம்பதியினர்.. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என டாக்டர்கள்  கூறிவிட்டனர். இதனையடுத்து ஜெசிகாவுக்கு radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது.

அதன்பின் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமப்பதாக முடிவெடுத்தார். டாக்டர்களின் ஆலோசனையின் படி ஜூலி அந்த கருவை தனது வயிற்றில் சுமந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜூலி தன்னுடைய மகள் மற்றும் மருகனின் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.. தற்போது குழந்தை ஜாக்குக்கு 3 வயதாகிறது.

இது குறித்து மருமகன் ஜெனிகின்ஸ் கூறுகையில், எனது மாமியார் ஜுலி மேற்கொண்ட இந்த விஷயத்தை நான் என்றும் மறக்கவே மாட்டேன். தற்போது என்னுடைய மகன் ஜாக் சுட்டித்தனமாக வளர்ந்து வருகிறான்.. அவனுக்கு கால்பந்து போட்டிகள் பார்ப்பது மிகவும் பிடிக்கிறது என்று  கூறியுள்ளார்.

Categories

Tech |