Categories
உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க… எல் சல்வடோர் நாட்டில் 30 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

மத்திய எல் சல்வடோர் நாட்டின் (El Salvador) கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கம் சீனப் பெருஞ்சுவரையும் தாண்டி ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்காவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வேடாரின் பிரதமர் நயீப் புக்கேலே (Nayib Bukele) நேற்று (சனிக்கிழமை) கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

முன்னதாக, அந்நாட்டு மக்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அனைத்துப் பள்ளிகளும் 3 வாரங்களுக்கு இடை நிறுத்தப்படும். மேலும் 500 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்  கூடும் கூட்டங்கள் அனைத்தும் வரும் 21 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

எல் சல்வடோர் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என்றாலும், 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |