பிரான்சில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகலை சென்னைக் மீனம்பாக்கம் விமானத்தில் கடத்திய வாலிபர் கைதுசெய்யப்பட்டார் .
பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்க விநாயகர் சிலையை கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து பின் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டனர் .
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பிரான்சில் இருந்து வந்த விமானத்தாய் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற ராஜலிங்கம் மகிந்தன் என்ற நபரின் உடைமைகளை சோதனை செய்தனர்
அதில் 1 கிலோ எடை கொண்ட சிறிய அளவிலான நான்கு வெள்ளி விநாயகர் சிலைகள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அதனைசோதித்ததில், அவை 12 காரட் தங்கத்தால் ஆன விநாயகர் சிலை என்பதும், அதில் முலாம் பூசி கடத்தி வந்ததும் தெரிந்தது.
அவரிடம் இருந்து நான்கு கிலோ எடை கொண்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகள் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, பாரீசில் உள்ள தனது நண்பர் ஒருவர் அதை தன்னிடம் கொடுத்ததாகவும், விமான நிலையத்தில் வந்து அதை ஒருவர் வாங்கிக்கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்தார் அதிகாரிகளிடம்
இதையடுத்து ராஜலிங்கம் என்பவரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அந்த தங்க சிலையினை சென்னை விமான நிலையத்தில் வாங்க வந்தவர் அடையாளங்கள் குறித்து கேட்டும் விசாரித்து மெர்க்க்கொண்டு வருகின்றனர்