சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1200க்கும் கீழ் சென்றுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், தமிழகத்தில் 54 அரசு பரிசோதனை மையங்களும், 53 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. இன்று மட்டும் 39,715 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,65,273 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 4,496 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 1,02,310 பேர் மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று மட்டும் 1,291 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1318 ஆக உயர்ந்துள்ளது..
மேலும் சென்னையில் இன்று 1,484 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், மொத்தம் 64036 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில் மட்டும் 1,5606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 1100க்கும் கீழ் சென்ற நிலையில் தற்போது மீண்டும் 1200க்கும் மேல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.