Categories
தேசிய செய்திகள்

இறந்த கணவன்… தனிமையில் தவிப்பு… மாமனாரை மணந்த மருமகள்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

கணவர் இறந்த 2 வருடத்தில் இளம்பெண் ஒருவர் மாமனாரை திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி சிங்.. இவருக்கு வயது 21 ஆகிறது. இளம் பெண்ணான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்துக்குப்பின் வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போது ஆர்த்தியின் கணவர் திடீரென இறந்து போனார்..

இதனால் அவருடைய கனவும் தகர்ந்து போனது. என்ன செய்வதென்று தெரியாமல் கணவனை இழந்த ஆர்த்தி தனிமையில் மிகவும் தவித்து வந்துள்ளார். தனிமையில் தவித்த மருமகள் ஆர்த்தியை அவருடைய மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் நன்றாக கவனித்து வந்துள்ளார். இதனால் மாமனாரையே திருமணம் செய்ய முடிவெடுத்தார் ஆர்த்தி.

மாமனார்

இதையடுத்து ராஜ்பூத் க்ஷத்ரிய மகா சபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில்  ஆர்த்தியை அவருடைய மாமனார் கிருஷ்ணராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.. கணவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் ஆர்த்தி சிங்கின் மறுமணத்திற்கு சாதிய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.. ஆனால் இந்த செய்தி கேட்டு ஆர்த்தியின்  குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

 

Categories

Tech |