சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராம மக்கள் அனைவரும் பழமையான ஒரு கல்லை வழிபாடு செய்து மழை பெய்ய வேண்டுமென்று வேண்டியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் மழை பெய்யாத காரணத்தால், அம்மாவட்டத்தில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் பெரும் சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர். அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து மழை வேண்டி, உதேலா என்ற கிராமத்தில் உள்ள பழமையான ஒரு கல்லை வழிபட்டு நூதன வழிபாடு நடத்தினார்கள்.
பாரம்பரியம் மிக்க பழமையான அந்த கல்லை வழிபாடு செய்வதன் மூலமாக மழை நிச்சயம் பெய்யும் என்று மக்கள் அனைவரும் நம்புகிறார்கள். இந்த நூதன வழிபாட்டில் பங்கேற்ற மக்கள் அனைவரும் கல்லை இறுக்கி அணைத்துக் கொண்டு கூச்சலிட்டு மழை பெய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். இந்த வழிபாட்டில் 84 ஆயிரம் கிராம மக்கள் பங்கேற்றார்கள்.