Categories
உலக செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை…. காணாமல் போன 17 பேர்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!

சீனாவில் பெய்த கனமழையினால் 7 பேர் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது 

சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தில் டையான் குவான் கவுண்டியில் லபாஷே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதனை அடுத்து இந்த நிலச்சரிவில் சிக்கிய 10 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைதொடர்ந்து கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள சிச்சுவான் பகுதிக்கு சுமார் 400 பேர் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 140 பேர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |