Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில்…. தற்காலிகமாக பணியாற்றும் அனைவருக்கும்…. பணி நிரந்தரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இருக்கும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து நீதிபதி, கூட்டுறவு சங்கங்களின் தற்காலிகமாக பலவருடங்களாக பணியாற்றும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்ந்த தற்காலிக கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பணியாற்றுபவர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |