கோவை மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்ட 52,273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. கோவையில் இதுவரை மொத்தம் 3,237 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.. இதனால் மொத்தம் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,826 ஆக அதிகரித்துள்ளது.. தற்போது 1,373 பேர் சிகிச்சையில் உள்ளனர்..