Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 65 இல்…. விஜய் கதாபாத்திரம் என்ன தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்…!!

தளபதி 65 திரைப்படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜயின் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து வரும் 24ஆம் தேதி தளபதி65 படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் எடுக்கப்படள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி65 திரைப்படத்தில் விஜய் ஒரு ரகசிய உளவுத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |