Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மக்காச்சோளத்தில் இத்தனை நன்மைகளா”..? இதுவரை யாரும் அறிந்திராத தகவல்… மிஸ் பண்ணாம பாருங்க..!!

மக்காச்சோளத்தில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் நமக்கு இத்தனை பயன்கள் தெரியுமா என்றாள் அது கேள்விக்குறிதான். மக்காச் சோளத்தில் உள்ள நன்மை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

சோளம் ஒரு சிறந்த தானியம். இது சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஆனால் நமக்கு மஞ்சள் நிறத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படும். இது கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகிய தாதுக்களைக் கொண்டது. உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் ஆகிய மூன்றுக்கும் நல்ல பயன் தரக்கூடியது.

சருமம் மற்றும் கூந்தல்

சோளத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் அதனை உற்பத்தி செய்கின்றது. இது சருமத்தின் சேதத்தை தடுக்க உதவுகிறது. அதனால்தான் அழகு சாதனப் பொருள்களில் இது மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிக நல்லது என்றாலும் அளவாக பயன்படுத்த வேண்டும் அதிகமாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல், வயிற்று வலி உண்டாகும்.

அனிமியா அபாயத்தை குறைக்கிறது

சோளம் வைட்டமின் பி6, போலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இது உடலில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றது. இதனால் ரத்த சோகை குறைகின்றது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு கப்பு சோளத்தில் 125 கலோரிகள், 4 புரதம். 2 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளதாக கூறுகின்றனர்.

ரத்த சர்க்கரைஅளவை குறைக்கும்:

சோளம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதை நாம் உணவோடு எடுத்துக் கொள்ளும்போது ரத்த சர்க்கரை அளவு குறைந்து நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவை நம் உடலுக்கு நல்ல பலனை தருகின்றது. ஆற்றலுக்கு உதவும்.

மலச்சிக்கலை தடுக்கிறது

ஒரு கப் சோளத்தில் தேவையான நார்ச்சத்துக்கள் உள்ளதால் இவற்றை நாம் எடுத்துக் கொள்ளும் போது மலச்சிக்கல் நோய் நமக்கு சரியாகிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கோதுமையை காட்டிலும் சோளத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். செரிமானம் சீராக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நமக்கு தீர்வு கிடைக்கும்.

எடை அதிகரிப்பு

எடையை அதிகமாக்க விரும்பினால் சோளத்தை நீங்கள் சாப்பிடலாம். சோளத்தை எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். இதில் கலோரிகள் இருப்பதால் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்தும் நம் உடலுக்கு நல்ல எடை அதிகரிப்பை ஊக்குவிக்கின்றது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் பெண்கள் கோலத்தை சேர்த்துக் கொள்வது தாய் சேய் இருவருக்கும் நல்லது. இதில் உள்ள போலிக் அமிலம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்களை கொண்டது. இதனால் குழந்தை பிறப்பு குறைபாடுகளுக்கான அபாயத்தைக் குறைக்கின்றது. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கு இது எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |