கடலூர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை 80 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேரும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 34 பேர் என மொத்தம் 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய 512 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 165 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோரோனோ பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. நேற்று 64 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,240ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.