விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளைகளில் ஈடுபட்ட பெண்ணை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டிற்குள் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த நகை பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துள்ளார். அதனை தொடர்ந்து மணிவண்ணன் என்பவரது வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் நகைகளை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்று உள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று கூடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அந்த பெண்ணை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.