டெல்லியில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டிய கையுறைகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் நோயாளிகளின் உயிர்களை பாதுகாக்க போராடிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் சிலர் டெல்லியில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கையுறைகளை தனியார் மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வந்து அதனை மீண்டும் பேக்கிங் செய்து சலூன் மற்றும் உள்ளூர் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 848 கிலோ கையுறைகள் பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.