டெல்லியில் கணவன் வீட்டில் இருக்கும்போதே மாமனார் மற்றும் மாமியாரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், குடும்ப வன்முறைகள் குடும்பத்தில் பிரச்சனைகள், கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தொடர்ந்து குற்றங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இதுபோலவே ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது..
ஆம், மேற்கு டெல்லியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் கவிதா. இவர் தன்னுடைய கணவர், குழந்தைகள், மாமனார் (ராஜ்சிங்) மற்றும் மாமியார் (ஓம்வதி) ஆகியோருடன் வசித்து வருகிறார். இதனிடையே மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரச்சனை பெரிதாக மருமகள் தன்னுடைய மாமியார் மற்றும் மாமனார் என்றும் கூட பாராமல் கழுத்தை நெரித்து, பின்னர் கத்தியால் இருவரையும் வெட்டி கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.இந்த கொடூர சம்பவம் நடைபெறும்போது கணவன் மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.
இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் படுக்கை அறையில் இருந்த மாமனார் மற்றும் மாமியாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த சமயம் கணவர் சதீஷும் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.