Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு… உணவு வழங்கி உதவும் சேவாக்…!!

டெல்லியில் உணவில்லாமல் பாதிக்கப்படுபவர்களுக்கு டோமினோஸ் பீட்சா உதவியுடன் வீடுவீடாக உணவு விநியோகம் செய்து வருகிறார் கிரிக்கெட் வீரர் சேவாக்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது வீட்டில் சமைத்த உணவை டோமினோஸ் பீட்சாவின் உதவியோடு வீடு வீடாக விநியோகம் செய்து உதவி வருகிறார். மேலும் உணவு தேவைப்படுவோர் தனக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |