Categories
மாநில செய்திகள்

30 ஆண்டுகளாக திமுகவில்…. “முட்டாளாக இருந்தேன்” இப்ப தான் புத்தி வந்திருக்கு – ராதாரவி…!!

30 ஆண்டுகளாக திமுகவில் தான் முட்டாளாகவே இருந்து விட்டதாக நடிகர் ராதாரவி பேட்டியளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காரைக்குடியில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் திமுகவை கருணாநிதி அடகு வைத்து விட்டதால் தான் ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம் என்று கூறிவருகிறார். மேலும் அதிமுகவை குறை கூற திமுகவுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. ஊழல் சாம்ராஜ்யம் என்பது திமுகவுக்கு தான் பொருந்தும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளின் 75 சதவீதம் பேர் தரகர்கள் தான் அவர்கள் விவசாயிகள் அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் டெல்லி விவசாயிகளின் போராட்டத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் பின்னணியில் இருப்பதாகவும், திமுகவில் 30 வருடங்களுக்கும் மேலாக நான் முட்டாளாகவே இருந்துவிட்டேன். தற்போது தான் எனக்கு புத்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |