அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரத்தை பார்த்து சொன்னார்… அண்ணா திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். மின்சார கட்டணத்தை 8 வருடமாக நாம் ஏற்றவில்லை, சொத்து வரியை நாம் 8 வருடமாக ஏற்றவில்லை, கழிவுநீர் சாக்கடை அந்த வரியையும் ஏற்றவில்லை, தண்ணி வரியையும் ஏற்றவில்லை, அம்மாவுடைய ஆட்சியிலிருந்து எடப்பாடி ஆட்சி வரைக்கும் ஏற்றவே இல்லை.
இப்போது நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் வரி, நின்னால் வரி, எல்லாத்துக்கும் வரி. இப்போது மின்சார கட்டணம் இந்த மாதம் 5000 ரூபாய் கட்டுப்பவர்கள், அடுத்த மாதம் 10 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்படுகிறது. தினசரி ஸ்டாலின் என்ன செய்கிறார் ? ஒரு ஐந்து சூட்டிங், அங்கு இருக்கின்ற அதிகாரிகள் ஐந்து இடத்தில் படப்பிடிப்பு மாதிரி நடத்துகிறார்கள், இவர் போகிறார்…
அப்படியே கையை பிடிக்கிறார், உதவி கொடுக்கிறார், ஒரு போட்டோ சூட், அடுத்து இன்னொரு இடம்… இதுதான் இப்போது நடக்கிறதே ஒழிய… மக்கள் திட்டங்கள் எதுவும் கிடையாது. தாலிக்கு தங்கம் திட்டம் அம்மா கொண்டு வந்தார்கள். பத்து வருடம் நடத்தினார்கள், அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம் திட்டம் இப்போது கிடையாது, எல்லா திட்டங்களையும் நிறுத்தியாச்சு. அம்மா கொண்டு வந்த திட்டம் ஏழை எளியவர்களுக்கு கொடுக்கக்கூடிய திட்டங்கள், பாட்டாளிகள் உழைப்பாளிகளுக்கு கொடுக்கக்கூடிய திட்டங்கள் அத்தனையும் போச்சு என தெரிவித்தார்.