நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலடி கொடுப்பேன் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நேற்றை சட்டப்பேரவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பேசியதாவது, வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு காரணங்களுக்கும்,
விளக்கங்களுக்கும் உரிமையான உள்ள விளக்கத்தை நான் சட்டமன்றத்தில் என்னுடைய வாதத்தில் அத்தனைக்கும் பதில் வரும். ஏற்கனவே 10 ஆண்டுகாலம் நான் சொன்ன பதில்…. அதில் சொல்லாத சில விவரங்களையும்…. மத்திய – மாநில அரசினுடைய நிதிமேலாண்மை பற்றியும், விவரமாக விளக்கமாக நான் உரிய பதிலை உரிய நேரத்தில் சட்டமன்றத்தில் தெரிவிப்பேன்.