எகிப்தில், 14 ஆண்டுகால மறு சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் இந்த பிரமிடு சக்காரா (Saqqara) பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இந்த பிரமிட்டை மறு சீரமைப்பு செய்து வந்தனர். தற்போது 14 ஆண்டுகால மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில், பிரமிடு திறக்கப்பட்டது.
இந்த பிரமிடு பணிக்காக சுமார் 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் கான்கிரீட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பிரமிடு எனவும் கூறப்படுகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலிலும் இந்த பிரமிடு இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.